FAQ - Frequently Asked Questions
1.Q : இணையதள நுழைவாயில்(Web Portal) என்றால் என்ன?
A : இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட (business profession) விஷயத்தைப் பற்றி மட்டும் விரிவாக தெரிந்துகொள்வது அது சம்மந்தமாக தொழிலை நடத்துபவர்கள் விபரங்களை சேகரித்துக் கொள்வது. இதன் மூலம் தங்களுடைய தொழிலை விரிவு படுத்திக் கொள்ள நல்ல சந்தர்ப்பமாக அமையும்.
2.Q : இந்த வெப் போர்ட்டலில்(பெனிபிட் பண்ட்ஸ்) இணைவதால் பெனிபிட் கம்பெனிகளுக்கு என்ன பயன்?
A : இன்றைய நிலையில் ஒரு கம்பெனிக்கென்று சொந்தமாக வெப்சைட் (www.companyname.com) போட வேண்டுமென்றால் குறைந்த பட்சம் ரூ.5000/- செலவிட வேண்டும், மற்றும் வருட பராமரிப்புக்கென்று குறைந்த பட்சம் ரூ.2000/- செலவு செய்ய வேண்டும். இந்த சேவையில் கம்பெனியைப் பற்றி வெப் பக்கங்களை போடுவதற்கு ரூ. 1000/- செலவு செய்தால் போதுமானதே, மற்றும் வருட பராமரிப்புக்கென ரூ.250/- செலவு செய்தல் மட்டுமே. தமிழகம் முழுவதும் (ஏன் உலகம் முழுவதும்) உங்க்ள் தொழிலைப் பற்றி அறிந்து கொள்ளலாம். உங்கள் தொழில் சம்மந்தமானவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
3.Q : எங்கள் பெனிபிட் நிறுவனம் ஒரே இடத்தில் மட்டுமே உள்ளது, மேலும் ஒரே ஊரில் உள்ள பெனிபிட் கம்பெனிக்கு இந்த் www.benefitfunds,in என்ற போர்டல் இண்டர்நெட்டில் போடுவதால் என்ன பயன்?
A : ஒவ்வொரு கம்பெனிக்கும் land line phone உள்ளது, ஆனால் mobile number ம் வைத்துள்ளோம், ஏனெனில் இன்றைய அவசரகாலத்திற்கு அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் தேவைப்படுகிறது. நமது கம்பெனியை நேரிடையாக வந்து தகவல்களை சேகரிக்கும் முன் 24 மணி நேரமும் இயங்கும் இண்டர்நெட்டில் தகவல்களை அறிந்து கொண்டு பிறகு உங்களை சந்திப்பதற்கும் தீர்க்கமான முடிவு செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்.
4.Q : வாடிக்கையாளர்களுக்கு தகவல்களை இணையதளம் மூலம் தெரிவிக்கலாமா?
A : கம்பெனித்தகவல்களை அந்தந்த வெப் பக்கங்களில் தெரிவிக்கலாம்.
5.Q : வாடிக்கையாளர்களை இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ளலாமா?
A : உங்களின் இ-மெயில் முகவரியை தொடர்புகொள்ள வேண்டிய முகவரி வெப் பக்கத்தில் தெரியப்படுத்தலாம். நமது இந்திய அரசாங்கம் நாட்டின் பேப்பர் செலவைக் குறைக்க சொல்லியுள்ளது. மேலும் இணையதள முகவரி மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவையை செய்யச்சொல்கிறது.
6.Q : இந்த பெனிபிட் பண்ட் இணையதள சேவையில் சேர்வதற்கு பெனிபிட் கம்பெனி நடத்தும் நாங்கள் என்ன செய்ய வேண்டும்.?
A : நீங்கள் இந்த சேவையில் சேர்வதற்கு தயாரானால் உடன் எங்களை தொடர்பு கொள்ளவும். எங்கள் பிரதிகள் மொபைல் மூலமாகவோ நேரிடையாகவோ விளக்கம் அளிப்பார்கள்.
7.Q : இந்த www.benefitfunds.in என்ற இணையதள முகவரியால் உலகுக்கு எங்களைப் பற்றி எப்படி தெரியும்.?
A : நீங்கள் இணைந்த 60-90 நாட்களுக்குள் கூக்கிள் சர்ஸ் இன்ஜினில் (www.google.co.in)
google search engine ல் உங்கள் கம்பெனியின் பெயரை டைப் அடித்தாலே போதும் உங்கள் விபரம் முழுவதும் பார்க்கலாம்.
8.Q : இந்த சேவையினால் எங்களுக்கு புதிய அங்கத்தினர்கள் சேர்வார்களா?
A : உங்கள் திட்டங்கள் மற்ற கம்பெனிகள் போன்று மக்களை கவரக்கூடியதாக இருந்தால் இந்த இண்டர்நெட் விளம்பரம் மூலம் வெளியூர் அங்கத்தினர்களே அதிகம் கிடைப்பார்கள்.
இந்த சேவையைப்பற்றிய உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது.

